Posts

வெள்ளிங்கிரி மலையின் இயற்கை

Image

கஞ்சாவும் சித்தரும்

Image
மதுரை வாலை சாமி ஞான கும்மி கள்ளுண்டு தள்ளுண்டு நில்லாதே பின்பு கஞ்சா உறக்கமும் கொள்ளாதே உள்ளுண்டு ஸோமக் கலையாதி பானத்தை ஊட்டிக் கும்மி அடியுங்கடி . கற்ப நிலையரிந் தெண்ணாமல் வெறிக் கஞ்சா உண்டு விழிப்பார்கள் அற்பர் குகைமலை சென்றாலும் வத்தை அறிய லாகுமோ ஞானப்பெண்ணே .   Download this as pdf   பத்ரகிரியார் கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமற் பஞ்சாமிர் தத்தைப் பருகுவது மெக்காலம் . சிவவாக்கியர் காய காய முன்பதாகக் கண்டவர் மதித்திட மாயவித்தை செய்வதெங்கு மடிப்புமோசஞ்ச் செயபவர் நேயமாய் கஞ்சா அடித்து நேரபினியைத் தின்பதால் நாயதாக நக்கி முக்கி நாட்டினில் அலைவரே . Download this as  pdf   அகப்பேய் சித்தர் ஆர லைந்தாலும் நீயலை யாதேயடி ஊர லைந்தாலும் ஒன்றையும் நாடாதே . Download this as  pdf  

குதம்பைச் சித்தர் பாடல்கள்

Image
பூரணம் கண்டோர் இப்பூமியிலே வரக் காரணம் இல்லையடி – குதம்பாய் காரணம் இல்லையடி. பூரணம் – முழுமை . மனிதன் இவ்வுலகில் பிறப்பதர்க்கு காரணம், முற்பிறவியில் முழுமை பெறாமையே. ஓங்காரம் நீங்கரப் பூரணம் கண்டோர்க்கு சாங்காரம் இல்லையடி- குதம்பாய் சாங்காரம் இல்லையடி. சாங்காரம்- சாவு ஓம் யென்னும் அட்சரத்தை உண்மை உணர்ந்து ஓதியவன், சாவை வெல்வான். அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினை பிண்ட்த்துள் பார்ப்பாயடி- குதம்பாய் பிண்ட்த்துள் பார்ப்பாயடி. Download this as  pdf   அண்டம்- உலகம் பிண்டம்- உடம்பு இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். நம் உடலிலும் இருக்கின்றார். எங்கும் நிறைந்தே இருக்கின்ற சோதியை அங்கத்துள் பார்ப்பாயடி- குதம்பாய் அங்கத்துள் பார்ப்பாயடி. அங்கம்- உடம்பு இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். ஆகவே உன் உடம்பில் இருப்பவனை, உன்னை அறிந்து உற்று நோக்கு. தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை மாண்டாலும் போற்றிடுவாய்- குதம்பாய் மாண்டாலும் போற்றிடுவாய். மாண்டால்- செத்தால் யாராலும் தொடப்படாத போது, வ

Yogic life - An introduction with English speech and Notes

Image
What is yogam? In what way it differs from yoga? Yoga- It enriches physical stability of human- Healthy and strong body Yogam- It enriches mental stability of human- Peaceful and sharp mind What is Ashthaanga yogam? If you want mukthi or wisdom, there is an easy way which contains eight levels of yogam, which were formed by ancient saints and devotees of India, the way they formed is Ashthaanga yogam or raja yogam. By practicing these yogam steps, it changes one’s lifestyle to reach extreme conscious state.  What are the contents of Ashthaanga yogam? Iyamam- what are the things we can do when we are in the lane of attaining wisdom. Nyamam- what are the things which we should not do Asana- how to maintain body Pranayama- How to regulate breath Prathyaagaram- How to regulate thought Dharanai- How to concentrate on a single thing Meditation- how to concentrate on true thing Samathi-  Because of heavy concentration on true thing (hidden in you), your tho

சிவவாக்கியர் - சாதியைப் பற்றிய கருத்து

Image
இருக்குநாலு வேதமு மெழுத்தையற வோதிலும் பெருக்கநீறு பூசிலும் பிதற்றினும் பிராணிரான்  உருக்கிநெஞ்சை யுட்கலந்த உண்மைகூற வல்லீரேல் சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே. இருக்கின்ற நாலு வேதங்களையும் பிழையில்லாமல் ஓதினாலும், திரு நீறு பூசினாலும், கடவுளைப் பாடுவதாலும் அவனை அடைய முடியாது. நீங்கள் உங்களுடைய மனத்தை நெருப்பிட்ட மெழுகுபோல் இளகச்செய்து, உங்களுள்ளே கலந்து இருக்கும் உண்மையை தெரிந்துகொள்ள முடியுமானால், கண்டிப்பாக சோதி சொருபனாய் விளங்கும் கடவுள் சிவனை அடையலாம். சாதியாவதேதடா சலந்திரண்ட நீரலோ பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ காதில்வாளி காரைகம்பி பாடகம்பொ னொன்றலோ சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே. சாதியாவது எது? குளம், குட்டை, ஆறு, ஊற்று, கடல் என வெவ்வேறாக தோற்றமளித்தாலும், அவை யாவும் நீராகிய ஒரு பொருளையே குறிக்கும். அது தவிர ஐம்புதங்களும் தங்களுக்குள் ஒரு தொடர்பு கொண்டு ஒரு பொருள் போல செயல்படும். தோடு, மூக்குத்தி, மாலை என வெவ்வேறாக தெரிந்தாலும் அவையாவும் பொன் ஆகும். ஆகையால் நான் இந்து, கிறிஸ்தவன், இஸ்லாம் என ஆணவம் கொண்டு சாதி பேதம் பேசித் திரியாதீர்.

சிவவாக்கியம் கூறும் உண்மைகள்- 2

Image
செய்யதெங்கி லேயிளநீர் சேர்ந்தகார ணங்கள்போல் ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோவில் கொண்டனன் ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோவில் கொண்டபின் வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே. உயரமான தென்னை மரத்தில் உள்ள தேங்காயில் இளநீரானது எப்படி வந்ததோ, அதே போல் சிவன் (ஐயன்) என்னுள்ளத்தில் வந்தார். ஐயன் என்னுள்ளத்தில் குடி கொண்ட பின், நான் உலக மக்களிடம் ஒன்றும் பேசுவதில்லை. கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா கோயிலுங் குளங்களுங் கும்பிடும் குலாமரே கோயிலு மனத்துளே குளங்களு மனத்துளே ஆவது மழிவது மில்லையில்லை இல்லையே. கோவில், குளங்கள் என்று புறப் பொருள்களையே கும்பிடும் மக்களே. உண்மையில் கோவிலும், குளங்களும் புறப் பொருளன்று. எவன் ஒருவன் தன மனதை கோவிலாகவும், குளமாகவும் எண்ணி; அதற்க்கான மன வலிமை பெற்று; தன்னை தியாகப்படுத்துவானோ அவனுக்கு இனி ஆக்கமும் இல்லை அழிவும் இல்லை. பாடல்கள் இசை வடிவில் பெற  click here.